தமிழக கடல் வழியாக படகில் கடத்திய 100 கிலோ கஞ்சா பறிமுதல் – இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது..!

தமிழகம்

தமிழக கடல் வழியாக படகில் கடத்திய 100 கிலோ கஞ்சா பறிமுதல் – இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது..!

தமிழக கடல் வழியாக படகில் கடத்திய 100 கிலோ கஞ்சா பறிமுதல் – இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது..!

தமிழக கடல் பகுதி வழியாக படகில் கடத்திய 100 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், 2 பேரை கைது செய்தனர்.தமிழக கடலோர பகுதியில் இருந்து படகில் கஞ்சாவை கடத்தி செல்பவர்கள், நடுக்கடலில் படகில் காத்திருக்கும் இலங்கை நபர்களிடம் கைமாற்றி விடுகின்றனர்.

இலங்கை படகில் கடத்திச் செல்லப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தலைமன்னார், யாழ்ப்பாணம் கடல் வழியாக இலங்கைக்குள் கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள ஏஜென்ட்கள் மூலம் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு இவை அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

படகில் கடத்தி செல்லப்படும் கஞ்சா, டன் கணக்கில் இலங்கை கடற்படையால் கடந்த காலத்தில் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் பாக் ஜலசந்தி கடல் வழியாக படகில் கடத்தி செல்லப்பட்ட கஞ்சா பார்சல்களை யாழ்ப்பாணம் கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். இதன் எடை 100 கிலோ. இலங்கையில் இதன் மதிப்பு ரூ.1 கோடி. கஞ்சாவை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், கடத்திச் சென்ற இலங்கையை சேர்ந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave your comments here...