எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்று பேசுவோம் : ஆளுங்கட்சியாக ஒன்று பேசுவோம் – திமுகவை கடுமையாக விமர்சித்த சீமான்

அரசியல்

எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்று பேசுவோம் : ஆளுங்கட்சியாக ஒன்று பேசுவோம் – திமுகவை கடுமையாக விமர்சித்த சீமான்

எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்று பேசுவோம் : ஆளுங்கட்சியாக  ஒன்று பேசுவோம் – திமுகவை கடுமையாக விமர்சித்த சீமான்

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, பேசிய அவர், எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்று பேசுவோம் ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒன்று செய்வோம் என அரசு செய்து கொண்டிருக்கிறது. எட்டு வழி சாலையை நாங்கள் எங்கு எதிர்த்தோம் என்று அமைச்சர் பேசுகிறார், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த அறிக்கை இருக்கிறது என சுட்டிக்காட்டினார். எட்டு வழி சாலை என்றால் அதையே பின்பற்றுகிறார்கள் என்று நீங்கள் நினைத்து விடக்கூடாது என்பதற்காக பயண தூர குறைப்பு சாலை என்று மாறி உள்ளது.

2035-இல் 10 கோடி பேர் பயணம் செய்வார்கள் என்று பயணிகளின் எண்ணிக்கை கூடுவது நாட்டின் வளர்ச்சி என்று பேசுவது சரியானது இல்லை என சுட்டிக்காட்டிய சீமான், பெங்களூர், ஹைதராபாத் மாநிலங்கள் வளர்ந்து விட்டதா? மருத்துவம் கல்வி போன்றதில் வளர்ந்து விட்டதா ? என கேள்வி எழுப்பினார். விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கூட்டுவது நாட்டின் வளர்ச்சியா ? என்றும் சாடினார்.

இன்று விலை நிலத்தில் நீங்கள் ஏர்போர்ட் கட்டலாம், ஆனால் தேவைப்படும்போது ஏர்போர்ட்டை விலை நிலமாக மாற்ற முடியுமா? இருக்கின்ற விமான நிலையத்தில் பயணிக்க பயணிகள் இல்லை என குற்றம்சாட்டினார்.

Leave your comments here...