உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மீண்டும் பிரதமர் மோடி முதலிடம்..!

இந்தியாஉலகம்

உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மீண்டும் பிரதமர் மோடி முதலிடம்..!

உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மீண்டும் பிரதமர் மோடி முதலிடம்..!

உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலை ‘தி மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். தி மார்னிங் போஸ்ட் தகவலின் படி உலகில் மிக பிரபலமான தலைவர்கள் தரவரிசையில் பிரதமர் மோடிக்கு 75 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 2வது இடத்தில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரூரஸ் மானுவல் லோபஸ் 63 சதவீதம், 3வது இடத்தில் இத்தாலி பிரதமர் மரியோ டிராஹி 54 சதவீதம், 4வது இடத்தில் பிரேசில் அதிபர் போல்சனரோ 42 சதவீதம், 5வது இடத்தில் அமெரிக்க அதிபர் பைடன் 41 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் 25 சதவீத ஆதரவுடன் 10வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்திய கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...