உத்தரப் பிரதேசத்தில் மின்சார பேருந்துகள் – தொடங்கி வைத்த முதல்வர் யோகி ஆதித்யநாத்..!

இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் மின்சார பேருந்துகள் – தொடங்கி வைத்த முதல்வர் யோகி ஆதித்யநாத்..!

உத்தரப் பிரதேசத்தில் மின்சார பேருந்துகள் – தொடங்கி வைத்த முதல்வர் யோகி ஆதித்யநாத்..!

உத்தரப் பிரதேசத்தில் லக்னோ, கான்பூர் ஆகிய நகரங்களில் 42 மின்சாரப் பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.தலைநகர் லக்னோவில் 34 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. எஞ்சியுள்ள 8 பேருந்துகள் கான்பூரில் இயக்கப்படவுள்ளன.

மேலும் 100 மின்சாரப் பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது. மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டால் அதிக சப்தம், மாசு அற்ற பொதுப்போக்குவரத்து சாத்தியப்படும்.


நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: மின்சாரப் பேருந்துகள் காலத்தின் தேவை. பொதுப் போக்குவரத்து மாசற்றதாக இருக்க வேண்டியது தற்போதைய காலகட்டத்திற்கு அவசியமாகிறது. நகரங்களுக்கு இடையே போக்குவரத்து இணைப்பை மின்சாரப் பேருந்துகள் மேம்படுத்தும்.

மாசற்ற நகரத்தை நோக்கி பயணிக்க இதை சாத்தியமாக்கிய அதிகாரிகளை வாழ்த்துகிறேன். இதுவொரு புதிய மைல் கல் சாதனையாகும். மற்ற நகரங்களுக்கும் விரைவில் மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

ஸ்மார்ட் நகரங்களாக்கப்படும் 100 நகரங்களில் உத்தரப் பிரதேசத்தில் 10 நகரங்கள் உள்ளன என்றார் யோகி ஆதித்யநாத்.கடந்த 2019இல் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, ஆலம்பர்க் முதல் கோமதிநகர் வரையிலான வழித்தடத்தில் முதல் மின்சாரப் பேருந்து போக்குவரத்தை அறிமுகம் செய்தது.

மின்சாரப் பேருந்துகளை சார்ஜ் செய்வதற்கான நிலையங்களும் லக்னோவில் இனிவரும் மாதங்களில் அதிகரிக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave your comments here...