கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

இந்தியா

கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உள்நாட்டு சந்தையில் கோதுமையின் விலை கடுமையாக அதிகரித்தது. இதனால் உள்நாட்டு சந்தையில் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

கோதுமை அல்லது மெஸ்லின் மாவுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகள்/ தடையிலிருந்து விலக்கு அளிக்கும் கொள்கை திருத்த முன்மொழிவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்புதல் கோதுமை மாவு ஏற்றுமதிக்கான கட்டுப்பாட்டை அனுமதிக்கும். இது கோதுமை மாவின் அதிகரிக்கும் விலை உயர்வை கட்டுப்படுத்தும். மேலும், சமூகத்தில் மிகவும் நலிந்த பிரிவினரின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும். இது சம்பந்தமாக வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் அறிவிக்கை வெளியிடும்.

முன்னதாக கோதுமை மாவு ஏற்றுமதி மீது எந்தவித தடையோ, கட்டுப்பாடோ விதிக்கக் கூடாது என்ற கொள்கை இருந்தது. நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், கோதுமை மாவின் விலையேற்றத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும், கோதுமை மாவு ஏற்றுமதி மீதான தடை மற்றும் கட்டுப்பாடுகளிலிருந்து விதி விலக்கை திரும்பப் பெறவேண்டிய தேவை ஏற்பட்டது.

Leave your comments here...