பெரியார் கல்லூரியில் மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை – விசாரணைக்கு உத்தரவு..!

தமிழகம்

பெரியார் கல்லூரியில் மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை – விசாரணைக்கு உத்தரவு..!

பெரியார் கல்லூரியில் மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை – விசாரணைக்கு உத்தரவு..!

திருச்சியில் பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு துறைகளில் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் இங்கு ஆங்கிலத் துறையில் முதுகலை பயிலும் மாணவி ஒருவர், பேராசிரியர் மீது நேரடியாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு பாலியல் புகார் அளித்து இருந்தார். திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியராகவும், ஆங்கிலத் துறை துணைத் தலைவராகவும் பணியாற்றி வரும் 54 வயதான பேராசிரியர் ஒருவர், கல்லூரி மாணவிகள் மற்றும் ஆராய்ச்சித் துறை மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

சில ஆண்டுகளாகவே அவர் மீது புகார்கள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அந்த பேராசிரியர் தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி நடவடிக்கையில் இருந்து தப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் கடந்த ஜூன் மாதம் கல்லூரியில் ஆங்கிலம் முதுகலை படிக்கும் மாணவி ஒருவர், அந்த பேராசிரியர் மீது பாலியல் புகாரைக் கல்லூரி முதல்வரிடம் கொடுத்துள்ளார்.இருப்பினும் சம்மந்தப்பட்ட பேராசிரியர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த மாணவி முதல்வரின் தனிப்பிரிவு, கல்லூரிக் கல்வி இயக்குநர் மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர் ஆகியோருக்கு நேரடியாகப் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கக் கல்லூரி நிர்வாகத்திற்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டது.அதன்படி ஜூலை 23இல் கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகவே தெரிகிறது. இதையடுத்து முழுமையான அறிக்கை கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை அனுப்பி சுமார் ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், இன்னும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை

இது தொடர்பாகக் கல்லூரி முதல்வர் சுகந்தி கூறுகையில், “புகார் கிடைத்ததும் முறையாக விசாரணை நடத்தினோம். அதில் சம்மந்தப்பட்ட பேராசிரியர் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இது தொடர்பாக ஆக.3இல் அறிக்கை அனுப்பிவிட்டோம். சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் விரைந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். அந்த பேராசிரியர் தனது அரசியல் செல்வாக்கைக் கொண்டு நடவடிக்கையைத் தடுப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பெரியார் கல்லூரியில் மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவு அளிக்கப்பட்டது. மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் தலைமையில் விசாரணை நடத்த கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவு அளித்துள்ளார்.

Leave your comments here...