குஜராத்தில் ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் – மும்பை போதைப்பொருள் தடுப்பு போலீசார் நடவடிக்கை..!

இந்தியா

குஜராத்தில் ரூ. 1,026 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை மும்பை போதைப்பொருள் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

பரூச் மாவட்டம், அங்கலேஷ்வர் பகுதியில் இயங்கி வரும் மருந்து தொழிற்சாலையில் சட்டவிரோதமாக போதைப் பொருள்கள் தயாரிக்கப்படுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, 513 கிலோ எடையுள்ள போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். இதில், ஒரு பெண் உள்பட 7 பேரை கைது செய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச சந்தை ரூ. 1,026 கோடி இருக்கும் என தெரிவித்தனர்.

Leave your comments here...