போதைப்பொருள் ஒழிப்பு – மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடத்திய காவல் துறையினர்..!

சமூக நலன்தமிழகம்

போதைப்பொருள் ஒழிப்பு – மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடத்திய காவல் துறையினர்..!

போதைப்பொருள் ஒழிப்பு  – மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி  நடத்திய காவல் துறையினர்..!

போதைபொருளுக்கு எதிரான பிரசாரத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று போதை பொருள் ஒழிப்பு தினத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஏராளமான மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

இதன் ஒருபகுதியாக இன்று திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில், போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில், திருச்சிராப்பள்ளி எம்.ஜி.ஆர் ரவுண்டானா கோர்ட்டு சாலை அருகில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களின் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்,மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

போதைப் பொருட்களுக்கு எதிரான பதாகைகள் பொருத்திய இந்த மோட்டார் சைக்கிள் பேரணியானது ஐயப்பன் கோவில் வழியாக செயின்ட் ஜான் வெஸ்ட்ரி பள்ளி,மத்திய பேருந்து நிலையம், காமராஜர் சிலை ராக்கின்ஸ் சாலை, ரயில்வே சந்திப்பு ரவுண்டானா, தலைமை அஞ்சல் நிலைய ரவுண்டானா, டிவிஎஸ் டோல்கேட் வழியாக அண்ணா விளையாட்டரங்கம் சென்றடைந்தது.

: Tharnesh -H

Leave your comments here...