வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் 45வது ஆண்டு விழா – கேக் வெட்டி கொண்டாடிய ரயில் பயணிகள்.!

தமிழகம்

வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் 45வது ஆண்டு விழா – கேக் வெட்டி கொண்டாடிய ரயில் பயணிகள்.!

வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் 45வது ஆண்டு விழா – கேக் வெட்டி கொண்டாடிய ரயில் பயணிகள்.!

45-வது பிறந்தநாள் கொண்டாடும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை கவுரவிக்கும் வகையில், ரயில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் ரயில் போக்குவரத்துக்கு திறவுகோலாக திகழும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. தென்மாவட்டங்களின் பகல் நேர பயணத்திற்காக வைகை எக்ஸ்பிரஸ், 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவுரவிக்கும் வகையில், ரயில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.

ஆசியாவிலேயே மீட்டர் கேஜ்ஜில், அதிவேகமாக இயக்கப்பட்ட ரயில் என்ற பெருமையும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்க்கு உண்டு. 1984-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகள் இணைக்கப்பட்ட பெருமையும் இந்த ரயிலுக்கு உண்டு. அதிக இழுவைத் திறன் கொண்ட என்ஜின் இணைக்கப்பட்டதும் இந்த ரயிலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நவீன வசதிகளும் முதன்முதலாக வைகை ரயிலில் தான் அறிமுகப்படுத்தப்பட்டன. அதே போன்று நாள்தோறும் பயணிகளால் நிரம்பி வழியும் இந்தியாவின் ஒருசில ரயில்களில் வைகைக்கு முக்கிய இடமுண்டு. தமிழ்நாட்டில் இயக்கப்படும் ரயில்களோடு ஒப்பிடும்போது வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் சாதனைக்குரிய தொடர்வண்டியாக தன் பெருமையை இன்றளவும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.

Leave your comments here...