அகில இந்திய வானொலியின் பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி இன்று காலமானார்..!

இந்தியா

அகில இந்திய வானொலியின் பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி இன்று காலமானார்..!

அகில இந்திய வானொலியின் பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி இன்று காலமானார்..!

அகில இந்திய வானொலியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி இன்று மும்பையில் காலமானார். அவருக்கு வயது 87. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி‘ என்று கேட்ட காலம் ஒன்று இருந்தது.

ஆகாசவாணி ..செய்திகள் வாசிப்பது என்ற வார்த்தைகளின் சொந்தக்காரர்.. அகில இந்திய வானொலியின் தமிழ் செய்தி வாசிப்பாளர். 80களில் இவரது குரலை கேட்காதவர்களே இல்லை என கூறிவிடலாம். இப்போது மாதிரி அந்தக் காலகட்டத்தில் தொலைக்காட்சிகள், தொலைபேசிகள் எல்லாம் எல்லோரிடமும் இருந்தது கிடையாது. பொழுது விடிந்தால் செய்தித்தாள்களைப் படித்துதான் நாட்டு நடப்புகளை மக்கள் தெரிந்து கொண்டனர். ஆனாலும் கிராமங்கள்-நகரங்கள் வித்தியாசம் இல்லாமல் வானொலி பெட்டிகள் பெரும்பாலானோரிடம் இருந்து வந்தது.

அகில இந்திய வானொலி மிகப் பிரபலமாக இருந்த காலம் அது. வானொலியில் நாட்டு நடப்பு செய்திகளையும், விளையாட்டு குறித்த செய்திகளை மக்கள் ஆர்வத்துடன் கேட்டு வந்த காலகட்டம். `செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி’ என்ற காந்த குரல் காலையிலேயே ஒலிக்கும். அதிகாலை பொழுதில் இவரது குரலை கேட்டபடியே பலரும் விழித்து எழுவார்கள். ஒலிபரப்புத் துறையில் அவரது பங்களிப்பிற்காக 2009 ஆம் ஆண்டில் தமிழக அரசு கலைமாமணி விருதை வழங்கி கெளரவித்தது.

இவருக்கு பூர்வீகம் தஞ்சாவூர். ஆனால், இவர் பிறந்தது படித்தது எல்லாமே மகாராஷ்டிர மாநிலம், மும்பை நகரில்தான். பி.ஏ. ஆங்கிலம் படித்த இவர் தமிழ் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார். இவரது கணவர் பெயர் தான் நாராயணசுவாமி. திருமணத்திற்கு பிறகு டெல்லி சென்றார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்தி, தமிழ், ஆங்கிலம் உள்பட 4 மொழிகளில் புலமைப் பெற்றவர் சரோஜ் நாராயணசுவாமி.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி தனது பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் செய்தியை தமிழ் உலகத்திற்கு வானொலி மூலம் தெரியப்படுத்திய குரலும் சரோஜ் நாராயணசுவாமி உடையது தான்.

பிரதமர் இந்திரா காந்தி என்பதற்கு பதிலாக அன்னை இந்திரா காந்தி என அவர் செய்தி வாசித்தபோது கூறியது அனைவரின் பாராட்டையும் பெற்றது. 35 ஆண்டுகள் வானொலியில் பணிபுரிந்த பிறகு, ஒலிபரப்புத் துறைக்கு பங்களிப்பை வழங்கி வந்தார். அவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக சரோஜ் நாராயணசுவாமி இன்று மும்பையில் காலமானார். இவரது மறைவுச் செய்தி தமிழ் நெஞ்சங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு வெளியிட்டு வருகின்றனர்.

Leave your comments here...