ஆடி மாத கடைசி வெள்ளி – அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோவிலில் 1008 விளக்கு பூஜை

ஆன்மிகம்

ஆடி மாத கடைசி வெள்ளி – அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோவிலில் 1008 விளக்கு பூஜை

ஆடி மாத கடைசி வெள்ளி – அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோவிலில் 1008 விளக்கு பூஜை

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருள்மிகு அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோவில் இந்து அறநிலைத்துறை கட்டுபாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த திருக்கோவிலில் , மாயூர்நாத சாமி உடன் அருளிய அஞ்சல் நாயகி அம்பாளுக்கு ஆடி மாத கடைசி வெள்ளி கிழமை இன்று சிறப்பு பூஜைகள் செய்து 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இராஜபாளையத்தில் பதினாறாம் நூற்றாண்டில் பெத்தவநல்லூர் என்ற இடத்தில் சிவனை வந்து பிரசவம் பார்த்ததாக ஐதீகத்துடன் இருக்கக்கூடிய ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல பழமையான இந்த திருக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளி அன்று நாடு செழிக்க வேண்டிய விவசாயம் செழிக்க வேண்டிய தொற்று நோய்களிலிருந்து மக்கள் காக்க வேண்டிய சிறப்பு பூஜைகள் நடைபெறும் .

அதைத் தொடர்ந்து, திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில், இன்று இராஜபாளையம் சுற்று வட்டார பகுதியில் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து, 1008 விளக்கு பூஜை நடைபெற்றது. விளக்கு பூஜை ஏற்பாடுகளை, செயல் அலுவலர் இரா. ராஜா செய்திருந்தார். மற்றும் கோயில் அதிகாரிகள் நிர்வாகிகள் நன்கொடையாளர்கள் என பலர் விளக்கு பூஜையை கலந்து கொண்ட சிறப்பித்தனர்..

Leave your comments here...