ஆட்சியை கவிழ்க்க சதி..? ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காரில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் – மேற்கு வங்கா போலீசார் அதிரடி..!

இந்தியா

ஆட்சியை கவிழ்க்க சதி..? ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காரில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் – மேற்கு வங்கா போலீசார் அதிரடி..!

ஆட்சியை கவிழ்க்க சதி..? ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காரில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் – மேற்கு வங்கா போலீசார் அதிரடி..!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் ஜார்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் ஹிமந்த் சோரன் முதல்-மந்திரியாக செயல்பட்டு வருகிறார். இதனிடையே, மேற்குவங்காள மாநிலத்தின் ஹவுரா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு காரில் மிகப்பெரிய அளவில் பணம் கொண்டு செல்லப்படுவதாக அம்மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து ரோந்து பணியை தீவிரப்படுத்திய போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் ராணிஹடி என்ற பகுதியில் வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தினர். அந்த காரில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் பயணித்தது தெரியவந்தது. மேலும், காரின் பின் பகுதியில் போலீசார் சோதனை நடத்தியபோது இருக்கைக்கு பின்னே கட்டுகட்டாய பணம் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த பணத்தை கைப்பற்றிய போலீசார் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சஷப், நமன் பிக்சல் கொங்கரி என 3 பேர் உள்பட காரில் பயணித்த 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களிடம் இந்த பணம் யாரிடம் பெறப்பட்டது. எங்கு கொண்டு செல்லப்படுகிறது உள்பட பல்வேறு கேள்விகளை போலீசார் எழுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சித்து வருவதாகவும், இதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்து வருகிறது. மேற்குவங்காளத்தில் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பயணித்த காரில் இருந்து கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave your comments here...