திராவிட மாடல் ஆட்சிக்கு காரணம் கத்தோலிக்க கிறிஸ்தவ மதமும், பாதிரியர்களும் தான் – சர்ச்சையாகும் சபாநாயகர் அப்பாவுவின் வீடியோ..!

தமிழகம்

திராவிட மாடல் ஆட்சிக்கு காரணம் கத்தோலிக்க கிறிஸ்தவ மதமும், பாதிரியர்களும் தான் – சர்ச்சையாகும் சபாநாயகர் அப்பாவுவின் வீடியோ..!

திராவிட மாடல் ஆட்சிக்கு காரணம் கத்தோலிக்க கிறிஸ்தவ மதமும், பாதிரியர்களும் தான் – சர்ச்சையாகும் சபாநாயகர் அப்பாவுவின் வீடியோ..!

தமிழகத்தின் வளர்ச்சிக்கு கிறிஸ்தவர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர் என்றும் அவர்கள் இல்லையென்றால் தமிழ்நாடு பீகார் ஆகியிருக்கும் என்றும் சபாநாயகர் அப்பாவு பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதய ராஜ் ஆகியோர் கடந்த மாதம் 28ம் தேதி திருச்சியில் உள்ள செயிண்ட் பால் சர்ச்சில் நிடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது தற்போது சர்ச்சையாகி வருகிறது.

அதில் அப்பாவு பேசியதாவது: பிரிட்டிஷ் ஆட்சி கொண்டு வந்த சட்டங்களால், அனைவருக்கும் கல்வி கிடைத்தது.தமிழுக்கு தொண்டாற்றிய கால்டுவெல், ஜி.யு.போப், வீரமாமுனிவர் போன்றவர்களுக்கு சிலை வைத்து பெருமை சேர்த்தவர் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. திருச்சபைகள், ஒருவருக்கொருவர் அன்பாக இருக்க வேண்டும் என்று தான் கூறுகின்றன. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் அனைத்து மதத்தினவரும் கல்வி கற்று, உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளனர்.

தமிழகம் கல்வியில் உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் கத்தோலிக்க கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள். உங்கள் உழைப்பு தான்.அருட் தந்தையர்கள் அருட்சகோதரிகள், சகோதரர்கள், அவர்கள் இல்லையென்றால், நீங்கள் திரும்பி பார்த்தால், பீஹார் போல் தமிழகமும் இருந்திருக்கும். இதையெல்லாம் தாண்டி உண்மையை சொல்ல வேண்டும் என்றால், என்னை உருவாக்கி இந்த இடத்திற்கு கொண்டு வந்தது கத்தோலிக்க தந்தையர்கள், கத்தோலிக்க சகோதரிகள். இந்த அரசும் நான் அடிக்கடி சொல்வேன், இந்த அரசு உங்கள் அரசு உங்களால் உருவாக்கப்பட்ட அரசு நீங்கள் பட்டினியாக இருந்து உருவாக்கப்பட்ட அரசு. நீங்கள் ஆண்டவரிடம் வேண்டி விரும்பி கொண்டு வரப்பட்ட அரசு. இந்த அரசு உங்களுக்கான அரசு.

இந்த சமூக நீதி திராவிட மாடல் என்று சொல்லுகின்ற இந்த அரசுக்கு, முழு மூல காரணமாக இருந்தது கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் தான், கிறிஸ்தவ பாதிரியர்கள் தான்.அனைத்து ஆயர்களிடமும் நான் பல முறை சொல்லியிருக்கிறேன். நீங்கள் யாரையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை. நீங்களே முடிவெடுத்து உங்கள் பிரச்னைகள் என்ன என்பதை எண்ணி ஆராய்ந்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக மறுக்க மாட்டார். மறுதலிக்க மாட்டார். காரணம், உங்களால் உருவாக்கப்பட்ட அரசு என்பது முதல்வருக்கு நன்றாகவே தெரியும். உங்கள் அரசு உங்கள் முதல்வர். நீங்கள் சென்று தைரியமாக உங்களது கோரிக்கைகளை வைத்து காலம் தாழ்த்தாமல் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை நீங்கள் பெற்று கொள்ளுங்கள். உங்களுக்கு துணையாக நான் இருக்கிறேன். தம்பி இனிகோ இருக்கிறார். பீட்டர் அல்போன்ஸ் இருக்கிறார்.

தமிழக வளர்ச்சியில் உங்களை நீக்கிவிட்டால், வளர்ச்சி ஒன்றுமே இல்லை. ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முக்கிய காரணமானவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதபோதர்கள் என்று சொன்னாலும், சமூக நீதியில் திராவிடத்தில் உயர்ந்து நிற்கிறது என்றால் அது உங்கள் உழைப்பு தான். நீங்கள் தான் அஸ்திவார கற்கள். உங்களுக்கு மேல் கட்டப்பட்டது தான் இந்த தமிழகம், இன்றைய தமிழகம். இவ்வாறு அப்பாவு பேசினார்.

சபாநாயகர் அப்பாவுவின் இந்த பேச்சு ஹிந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலர், அப்பாவுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. அதனை பார்த்த பலர், சபாநாயகரை விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த சர்ச்சை தொடர்பாக ஏ.என்.ஐ. ஊடகத்துக்கு விளக்கம் அளித்துள்ள சபாநாயகர் அப்பாவு, பாஜக எனது பேச்சை விளம்பரப்படுத்தினால் அது நல்லது. நான் அப்படி சொல்லவில்லை என்று சொல்லமாட்டேன். ஆம், நான் அப்படித்தான் சொன்னேன். ஆனால் சமூக வலைதளங்களில் ட்ரிம் செய்யப்பட்ட பதிப்புகள் மட்டுமே பரப்பப்படுகின்றன. நான் பேசியது வரலாற்று உண்மை. இதில் அரசியல் இல்லை’ என கூறியுள்ளார்.

Leave your comments here...