மாணவியை விடுதிக்கு அழைத்து பாலியல் தொல்லை – சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது..!

தமிழகம்

மாணவியை விடுதிக்கு அழைத்து பாலியல் தொல்லை – சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது..!

மாணவியை விடுதிக்கு அழைத்து பாலியல் தொல்லை – சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது..!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் கோபி (வயது 45). இவர் கடந்த மே மாதம் முதல் பொறுப்பு பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம், சேலம் சித்தர் கோவில் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்னர், பேராசிரியர் கோபி மாணவியிடம் ஆராய்ச்சி மேற்படிப்பு பாடம் தொடர்பாக விளக்கம் அளிப்பதாகவும் உடனே தான் தங்கி இருக்கும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதிக்கு வருமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து மாணவி தனது உறவினர்களுடன் பதிவாளர் கோபி தங்கியிருக்கும் விடுதிக்கு சென்றார். அப்பொழுது உறவினர்கள் விடுதிக்கு வெளியே காத்திருந்தனர். மாணவி மட்டும் விடுதிக்கு சென்று பதிவாளர் கோபியை சந்தித்தார்.

அப்போது, பதிவாளர் கோபி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து வெளியே வந்த மாணவி உறவினரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் பதிவாளர் கோபியை சராமரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து படுகாயம் அடைந்த பதிவாளர் கோபி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவி கருப்பூர் காவல் நிலையத்தில் பதிவாளர் கோபி மீது புகார் அளித்தார். அதே போல அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை தாக்கியதாக பதிவாளர் கோபியும் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

Leave your comments here...