ஆடி அமாவாசை : சதுரகிரிமலை ஸ்ரீசுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு கூடுதலாக 2 நாட்கள் அனுமதி..!

ஆன்மிகம்

ஆடி அமாவாசை : சதுரகிரிமலை ஸ்ரீசுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு கூடுதலாக 2 நாட்கள் அனுமதி..!

ஆடி அமாவாசை : சதுரகிரிமலை ஸ்ரீசுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு கூடுதலாக 2 நாட்கள் அனுமதி..!

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரிமலை, ஸ்ரீசுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக, கோவிலுக்கு செல்வதற்கு கூடுதல் நாட்கள் அனுமதி வழங்க வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, கூடுதலாக 2 நாட்கள் வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சதுரகிரிமலை ஸ்ரீசுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு, பிரதோஷம் நாளில் இருந்து தொடர்ச்சியாக 4 நாட்கள் என ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது. வரும் 28ம் தேதி (வியாழன் கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு வழக்கம் போல 4 நாட்கள் மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்லலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

ஆடி அமாவாசைக்கு தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிமலைக்கு வருவார்கள் என்பதால் சுவாமி தரிசனத்திற்கு கூடுதல் நாட்கள் ஒதுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் கூடுதலாக 2 நாட்கள் அனுமதி வங்கியுள்ளது.

அதன்படி நாளை 25ம் தேதி (திங்கள் கிழமை) முதல், 30ம் தேதி (சனி கிழமை) வரை பக்தர்கள் ஸ்ரீசுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு கூடுதல் நாட்கள் ஒதுக்கியிருப்பது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave your comments here...