68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா: விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா -5 தேசிய விருதுகளை தட்டி தூக்கிய சூரரைப் போற்று …!

இந்தியாசினிமா துளிகள்தமிழகம்

68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா: விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா -5 தேசிய விருதுகளை தட்டி தூக்கிய சூரரைப் போற்று …!

68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா:  விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா -5 தேசிய விருதுகளை தட்டி தூக்கிய சூரரைப் போற்று …!

இந்திய திரைத்துறையில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்களுக்கு தேசிய விருதை வழங்கி ஒன்றிய அரசு கவுரவித்து வருகிறது. அநத வகையில் 68-வது தேசிய விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள திரைப்படங்களில் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது.

2020-ம் ஆண்டுக்கான சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் 68-வது தேசிய விருது பட்டியலில் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது.

நடிகர் சூர்யா நாளை தனது 47- வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்த அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது அவருக்கான மிகப்பெரிய பிறந்தநாள் பரிசு என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சூரரைப் போற்று திரைப்படம் கடந்த 2020-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை நடிகர் சூர்யா தனது 2D Entertainment என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரங்களை சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்தனர்.

மேலும் ஊர்வசி, மோகன் பாபு மற்றும் கருணாஸ் ஆகியோர் துணை கதாப்பத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையானது ஏர் டெக்கான் வானூர்தி நிறுவனத்தைத் துவக்கியவரான கோ. ரா. கோபிநாத்த்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் வெளியானபோது பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இன்று டெல்லியில் 68-வது தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த திரைக்கதைக்கான 5 விருதையும் சூரரைப் போற்று திரைப்படம் தட்டிச்சென்றுள்ளது. இந்தநிலையில், நடிகர் சூரியாவுக்கான மிகப்பெரிய பிறந்தநாள் பரிசு என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சூரரைப்போற்று படத்துக்கு தேசிய விருதுகள் பெற்ற நடிகர் சூர்யா, இயக்குநர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவுக்கு திரையுலகத்தை சேர்ந்தவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த வசனம் என்று 2 விருதுகளை மண்டேலா படத்தை இயக்கிய அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டது. மேலும் இயக்குநர் வசந்த் இயக்கியுள்ள சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்கு 3 விருதுகள் வழங்கப்பட்டது.

இந்தநிலையில், 10 தேசிய விருதுகளை வென்ற திரைப்பட குழுவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

68-வது தேசிய திரைப்பட விருதுகளைக் குவித்துத் தமிழ்த்திரையுலகுக்குப் பெருமை சேர்த்துள்ள தம்பி சூர்யா, இயக்குநர் சுதா கொங்காரா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட சூரரைப்போற்று படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் வசந்த், நடிகை லட்சுமி பிரியா, ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் அஸ்வின், நடிகர் யோகி பாபு உள்ளிட்ட மண்டேலா படக்குழுவினருக்கும் எனது பாராட்டுகள்.

அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள்…

சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும்..என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave your comments here...