மத்திய அரசின் ஜவுளி பூங்கா திட்டம் – செயல்படுத்த வலியுறுத்தி நடை பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், சாலை மறியல் ஈடுபட்ட பாஜகவினர் கைது..!

தமிழகம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஜவுளி பூங்கா அமைக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்தும் அதை உடனடியாக செயல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து சிவகாசியில் இருந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு நடை பயணமாக சென்று மனு கொடுக்க பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்காக, இன்று மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து பாஜக கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொள்வதற்காக புறப்பட்டனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானாவில் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலிலும் ஈடுபட்டதால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறை உடனடியாக அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைந்தனர். இதேபோன்று, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave your comments here...