கேரளாவில் நீட் தேர்வில் உள்ளாடையைக் களையச்சொன்ன விவகாரம் : 5 பெண்கள் கைது..!

இந்தியா

கேரளாவில் நீட் தேர்வில் உள்ளாடையைக் களையச்சொன்ன விவகாரம் : 5 பெண்கள் கைது..!

கேரளாவில் நீட் தேர்வில் உள்ளாடையைக் களையச்சொன்ன விவகாரம் : 5 பெண்கள் கைது..!

கேரளாவின் கொல்லத்தில் நீட் தேர்வின் போது மாணவிகளை ஆடைகளை களையக் கூறிய விவகாரத்தில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள மார்தோமா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் & டெக்னாலஜி கல்லூரியிலும் நெட் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கல்லூரிக்கு தேர்வு எழுதச் சென்ற மாணவிகளிடம் மேல் உள்ளாடையை அகற்றுமாறு தேர்வு மைய அதிகாரிகள் வலியுறுத்தினர். உள்ளாடைகளில் உலோக ஹூக் இருப்பதால் தேர்வு எழுத சில மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், மாணவியின் தந்தை ஒருவர் கைப்பட புகார் கடிதம் எழுதி, காவல்நிலையத்தில் புகார் அளித்தும் உள்ளார்.

மேலும் இந்த நிகழ்வால் மனஉளைச்சல் அடைந்த தன் மகளால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்கும்படி, கொல்லம் காவல் கண்காணிப்பாளருக்கு ,மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், கேரள மாணவிகளிடம் உள்ளாடைகளை கழற்றி, சோதனை செய்த விவகாரம் தொடர்பாக கேரள அரசு, ஒன்றிய அரசு தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், உண்மை கண்டறியும் குழுவும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், மாணவிகளின் ஆடைகளை களையக் கூறிய விவகாரத்தில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, மாணவிகளுக்கு ஏற்பட்ட கொடுமையை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அப்போது தேர்வு மையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது.

Leave your comments here...