காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் : வீரர்களுடன் 20-ம் தேதி கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி..!

இந்தியாவிளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் : வீரர்களுடன் 20-ம் தேதி கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி..!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் :  வீரர்களுடன் 20-ம் தேதி கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி..!

நடப்பு ஆண்டின் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காமில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவில் இருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய அணியினருடன் ஜூலை 20-ம் தேதி அன்று காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாட உள்ளார்.

இதில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளோடு அவர்களின் பயிற்சியாளர்களும் பங்கேற்பார்கள். முக்கியமான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியாக இந்த சந்திப்பு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...