ரயில் பெட்டியின் மீது ஏறி செல்பி எடுத்து விளையாடிய சிறுவன் – மின்சாரம் தாக்கி பலி!

தமிழகம்

ரயில் பெட்டியின் மீது ஏறி செல்பி எடுத்து விளையாடிய சிறுவன் – மின்சாரம் தாக்கி பலி!

ரயில் பெட்டியின் மீது ஏறி செல்பி எடுத்து விளையாடிய சிறுவன் – மின்சாரம் தாக்கி பலி!

மதுரை கூடல் நகரில் ரயில் பெட்டியின் மீது ஏறி செல்பி எடுத்து விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தான்.

மதுரை முல்லை நகர் பழனி என்பவரின் மகன் விக்னேஷ்வர் வயது 17. இவர் தனது நண்பர்களுடன் கூடல் நகர் சரக்கு ரயில் நிலையப் பகுதியில் விளையாட வந்துள்ளான். அவன் நண்பர்களுடன் நேற்று மதியம் அருகில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பெட்டியின் மீது ஏறி விளையாடிக்கொண்டிருந்தான். செல்பி எடுத்தும் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவையும் அறியாமல் ரயில் பெட்டியின் மேல் 25ஆயிர் வோல்ட் மின் பாதையில் அவன் உடல் பட்டுவிட்டது .

இதனால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டான்.இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சிறுவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவன் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தான்.

பொதுவாக வீடுகளில் பயன்படும் 230 ஓல்ட் மின்சாரம் தாக்கினாலே தாங்க முடியாமல் உடனடியாக உயிரிழந்து விடுவார்கள். ஆனால் ரயில் பெட்டியை இயக்கக்கூடிய மின்சாரம் 25ஆயிரம் வோல்ட் ஆகும். எனவே பொதுமக்கள் பெரும் ஆபத்தை விளைவிக்கும் இந்த மின் பாதையை நெருங்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தும் வேண்டுகோள் விடுத்தம் உள்ளது.

Leave your comments here...