ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் – இந்துக்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் ..!

இந்தியா

ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் – இந்துக்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் ..!

ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் – இந்துக்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் ..!

ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இந்துக்களை வழிபட அனுமதிக்க கோரி இந்துக்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் ஞானவாபி மசூதியின் சுற்றுச்சுவரில் உள்ள இந்து கடவுள்களை வழிபட அனுமதிக்குமாறு கோரி இந்துப் பெண்கள் வாரணாசி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அந்த மசூதியில் கள ஆய்வு செய்து வீடியோவாகப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. கள ஆய்வு செய்யப்பட்டபோது அந்த மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாமி மசூதியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தில் இந்து பக்தர்களை வழிபட அனுமதிக்ககோரி ஸ்ரீகிருஷ்ணா ஜென்மபூமி முக்தி தளத்தின் தலைவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் ஜூலை 14-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும் ‘சிரவண’ மாதத்தில் சிவலிங்க பூஜை மேற்கோள்ள அரசியலமைப்பு உரிமையை மேற்கோள்காட்டி அனுமதி கோரப்பட்டுள்ளது.

மேலும் அந்த மனுவில், இந்த விவகாரம் ஏற்கெனவே வாரணாசி மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் இருந்தாலும், வாரணாசியில் உள்ள சிவன் கோயிலை இடித்துவிட்டு ஞானவாபி மசூதி கட்டப்பட்டது என்பதை பல்வேறு பதிவுகள் வெளிப்படுத்துகின்றன. எனவே, ஒரு வழிபாட்டாளராக, மசூதி வளாகத்தில் சிவலிங்கம் இருந்தால், சட்டப்படி விண்ணப்பதாரரின் வழிபாட்டு உரிமைகள் படி, அங்கு போய் வழிபட உரிமை உண்டு என்று கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...