ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..!

தமிழகம்

ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..!

ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று வழங்கினார்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் ஏற்பாட்டில், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 990 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜா திருமண மண்டபத்தில்
நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட திட்ட அலுவலர் ராஜம் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தார். தனுஷ் எம்.குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.ஏல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, குத்து விளக்கேற்றி வைத்து, 990 கர்ப்பிணிகளுக்கு சேலை, ஊட்டச்சத்து பொருட்கள், பழங்கள், தாம்பூலம் உள்ளிட்ட சீர்வரிசை பொருள்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அவர் பேசுகையில்: உங்களுக்கு கர்ப்ப காலம் என்பது மிக முக்கியமான காலகட்டம். முந்தைய காலங்களைப் போல் இல்லாமல் தற்போது அரசு மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள் பெருகி உள்ளது. அதனால், சுகப்பிரசவம் அதிகமாக நடைபெறுகிறது. கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். தவறாமல் குறிப்பிட்ட நாட்களில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கல்வி ஒன்றே சொத்து.

அதனால், எந்த புலமையாக இருந்தாலும் அவர்களை நன்றாக படிக்க வையுங்கள். கல்வியால் மட்டும் தான் வாழ்க்கையில் உயரமுடியும். விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமும் தொடங்கப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தங்கலட்சுமி நன்றி கூறினார்.

Leave your comments here...