‘அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தேவை இருக்காது’ – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

இந்தியா

‘அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தேவை இருக்காது’ – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

‘அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தேவை இருக்காது’ – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாட்டிற்கான தேவை இருக்காது என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் அகோலா பகுதியில் உள்ள பஞ்சப்ராவ் தேஷ்முக் கிரிஷி வித்யா பீடம் சார்பில் முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் பெட்ரோல் பயன்பாட்டிற்காக தேவை முடிவுக்கு வரும். இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் பேட்டரிகள், பசுமை ஹைட்ரஜன், எத்தனால், சி.என்.ஜி அல்லது எல்.என்.ஜி போன்ற பசுமை எரிபொருள்களை கொண்டு தான் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், நாட்டில் வேளாண்துறை வளர்ச்சி தற்போது 12 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது அடுத்த 5 ஆண்டுகளில் 12 முதல் 20 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். இதற்காக வேளாண் ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அவர்களை கேட்டு கொள்வதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள் மிகவும் திறமையானவர்கள், புதிய தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள் குறித்து அவர்களுக்கு வழிகாட்டுதல், பயிற்சி தேவைப்படுகிறது. புதிய விவசாய கண்டுபிடிப்புகள் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளிடத்தில் சென்று சேருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave your comments here...