கோவா அரசியலில் பரபரப்பு – பாஜகவுக்கு தாவும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்..?

அரசியல்

கோவா அரசியலில் பரபரப்பு – பாஜகவுக்கு தாவும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்..?

கோவா அரசியலில் பரபரப்பு –  பாஜகவுக்கு தாவும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்..?

கோவாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் லோபோ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை கைப்பற்றியது.காங்கிரஸ் 11 தொகுதிகளை கைப்பற்றியது. பிற கட்சிகள் எஞ்சிய இடங்களை கைப்பற்றின.

கோவாவில் மழைக் கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 8 பேரை தங்கள் பக்கம் ஈர்க்க பாஜக முயல்வதாக தகவல் வெளியானது. இதையடுத்து, கோவா விரைந்த காங்கிரஸ் கட்சியின் கோவா பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், மொத்தமுள்ள 11 எம்எல்ஏக்களில் 10 பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் எம்எல்ஏக்களில் மூன்றில் இரு பங்கு எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயன்று வருவதாகவும், இதற்காக பெருமளவில் பணம் கொடுக்க அக்கட்சி முன்வந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். எனினும், தங்கள் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் உறுதியாக அதனை மறுத்துவிட்டதாகவும் அவர்களை பாராட்டுவதாகவும் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்தார்.

மேலும், பாஜகவுடன் இணைந்து சதியில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் லோபோ, அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார். முன்னாள் முதலமைச்சர் திகம்பர் காமத் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவர் பாஜகவில் இணைய முடிவெடுத்திருப்பதாகவும், அவருக்கு ஆதரவாக மைக்கேல் லோபோ செயல்பட்டது தெரிய வந்திருப்பதாகவும் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார். இதனால், கோவா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave your comments here...