விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு – கம்பி வேலி போட்டதால் பொதுமக்கள் பாதிப்பு..!

உள்ளூர் செய்திகள்சமூக நலன்தமிழகம்

விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு – கம்பி வேலி போட்டதால் பொதுமக்கள் பாதிப்பு..!

விவசாய நிலங்கள்  ஆக்கிரமிப்பு – கம்பி வேலி போட்டதால் பொதுமக்கள் பாதிப்பு..!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே செம்புக்குடிபட்டி கிராமத்தில் முல்லைப் பெரியாறு பாசன கால்வாய்மூலம் விவசாய நிலங்களும் மாணாவாரி விவசாய நிலங்கலும் அதிகம் உள்ளது. இந்தப் பகுதி பாரம்பரியமாக விவசாயம் சார்ந்த பூமி ஆகும். மேலும், இந்த கிராம மக்களுக்கு விவசாயத்தைத் தவிர வேறு தொழில் வாய்ப்புகளும் இல்லை.

இந்நிலையில், செம்புகுடி பட்டியில் புதிதாக சாலையோரம் நிலம் வாங்கிய தனிநபர் தனது தோட்டம் முழுவதும் கம்பி வேலிகளால் அடைத்து விட்டார். இதனால், சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்குச் செல்லக்கூடிய விவசாயிகளுக்கு பாதை இல்லாமல் தவித்து வருகின்றனர். மற்றும் கிராம பொதுமக்கள் பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்த வேலியையும் அடைத்ததால், அவர்கள் செய்வதறியாது திகைத்து வருகிறார்கள். வேளாண்மை துறை அதிகாரிகளும், அலங்காநல்லூர் ஊராட்சி ஓன்றிய அதிகாரிகளும் ,மதுரை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்கள் பயன்படும் வழியாக பாதை உருவாக்கித் தர வேண்டும். மேலும், விவசாய நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கம்பி வேலிகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று கிராம பொதுமக்கள் பலர் கூறுகின்றனர்.

இந்த கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கூறும் போது: விவசாயிகளின் நண்பன் என்று கூறிக்கொள்ளும் அரசு விவசாயிகளுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து இது போன்ற நில சுவான்தாரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால் அதிகம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறுகின்றனர். மேலும் அதிகாரிகள் வந்து உடனடியாக சரி செய்ய விட்டால், செம்புகுடிபட்டி அருகே உள்ள மதுரை திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய போராட்டமும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

– மதுரை ரவிசந்திரன்

Leave your comments here...