மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி : மனநல காப்பகத்திற்கு அனுப்பி வைத்த போலீசார்..!

உள்ளூர் செய்திகள்தமிழகம்

மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி : மனநல காப்பகத்திற்கு அனுப்பி வைத்த போலீசார்..!

மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி : மனநல காப்பகத்திற்கு அனுப்பி வைத்த போலீசார்..!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, அச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் சில ஆண்டுகளாகவே மனநலம் பாதிக்கப்பட்டு காரியாபட்டி பேருந்து நிலையம் பகுதிகளில் சுற்றி திரிந்து வந்தார். சாப்பாடு சரியாக சாப்பிடாமல் உடல் மெலிந்து காணப்பட்டார்.

இவரால், காரியாபட்டி பேருந்து நிலையம் வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வந்ததாலும், மனநிலை பாதிக்கப்பட்ட நபர் சாப்பிடாமல் உடல் மெலிந்து காணப்பட்டதை அறிந்த காரியாபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பா. அசோக்குமார் தலைமையில், போலீசார் மனநலம் காப்பகத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர்.

அதன் அடிப்படையில், காரியாபட்டி பேருந்து நிலையம் அருகில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட லட்சுமி என்பவரை காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சியில் உள்ள அன்னை மனநலக் காப்பகத்தில் சேர்ப்பதற்காக நிர்வாகிகளிடம் காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஒப்படைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட லட்சுமியின் உறவினர்களுக்கு தகவல் தரப்பட்டுள்ளது.

Leave your comments here...