தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் : டிசம்பர் 27, 30ம் தேதிகளில் நடைபெறும் : மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவிப்பு.!

அரசியல்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் : டிசம்பர் 27, 30ம் தேதிகளில் நடைபெறும் : மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவிப்பு.!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் : டிசம்பர் 27, 30ம் தேதிகளில் நடைபெறும் : மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவிப்பு.!

தமிழகத்தில் மூன்று வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. மேலும், சில மனுக்கள் தற்போது கூடுதலாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளில் மாநிலத் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டது.

இந்நிலையில் இன்று காலை தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் அறிவித்தார். அதன்படி கிராமப்புற ஊராட்சித் தேர்தலுக்கான தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டது.

1ம் கட்ட தேர்தல்: டிசம்பர் 27

2ம் கட்ட தேர்தல்: டிசம்பர் 30

வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும் நாள்: டிசம்பர் 6

வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்: டிசம்பர் 13

திரும்ப பெற கடைசி நாள்: டிசம்பர் 18

தேர்தல் முடிவு: ஜனவரி 2, 2020

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, ”கிராம உள்ளாட்சி தேர்தல் வழக்கம்போல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும். தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வார்டுகவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் தேதி தற்பொது அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Leave your comments here...