ஐஎன்ஏஎஸ்-324 இலகு ரக ஹெலிகாப்டர் கடற்படையில் இணைப்பு.!

இந்தியா

ஐஎன்ஏஎஸ்-324 இலகு ரக ஹெலிகாப்டர் கடற்படையில் இணைப்பு.!

ஐஎன்ஏஎஸ்-324 இலகு ரக ஹெலிகாப்டர்  கடற்படையில் இணைப்பு.!

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் ஐஎன்ஏஎஸ்-324 கடற்படையில் இன்று இணைக்கப்பட்டது. விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் ஐஎன்எஸ் தேகா போர்க்கப்பலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படை கிழக்கு மண்டல வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ் குப்தா தலைமை தாங்கினார்.

இந்த ஹெலிகாப்டரில் நவீன கண்காணிப்பு ரேடார் உள்ளிட்ட நவீன வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. சுயசார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. அத்துடன் மனிதநேய உதவி, பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் ஆகியவற்றையும் மேற்கொள்ளும் வகையில் இந்த ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதி இதில் உள்ளது.

Leave your comments here...