மத்திய பிரதேசத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை தீ வைத்துக் எரித்த கும்பல்..!

இந்தியா

மத்திய பிரதேசத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை தீ வைத்துக் எரித்த கும்பல்..!

மத்திய பிரதேசத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை  தீ வைத்துக்  எரித்த கும்பல்..!

பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை, உயிரோடு தீ வைத்துக் எரித்துக் சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.

ஆண்டாண்டு காலமாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர் இந்தியாவில் பல்வேறு வகைகளில் ஒடுக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் இது போன்ற சம்பவங்கள் நடந்து விடுவது பேரதிர்ச்சியை அளித்து விடுகிறது.

அரசு வகுத்துள்ள திட்டத்தின் மூலம் மத்தியப் பிரதேசத்தில் ஒரு பழங்குடியின குடும்பத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த குடும்பத்தைச் சேர்ந்த 38 வயது பெண் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலத்தை சமூக விரோதிகள் 3 பேர் ஆக்கிரமித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து ராம்பியாரி சஹாரியா அவர்களிடம் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் 3 பேரும் சேர்ந்து, ராம்பியாரி சஹாரியாவை அவரது வயலில் வைத்து தீயிட்டு கொளுத்தி இருக்கிறார்கள். வலி தாங்க முடியாத அந்த பெண் கதறித் துடித்துள்ளார். இதை பார்த்து ரசித்த 3 பேரும், வலியில் துடித்த ராம்பியாரி சஹாரியாவை அப்படியே வீடியோ எடுத்துள்ளனர். அதனை மிகவும் தைரியமாக சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து உள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ராம்பியாரி சஹாரியாவின் கணவர் அர்ஜூன் சஹாரியா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். தீ வைத்துக் கொளுத்தப்பட்ட ராம்பியாரி சஹாரியாவுக்கு அதிகபட்ச தீக்காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸ் எஸ்பி பங்கஜ் ஸ்ரீவஸ்தவா கூறும் போது, ‘‘கடந்த சனிக்கிழமை ராம்பியாரி சஹாரியாவின் கணவர் அர்ஜுன் சஹாரியா தனது மனைவி தீக்காயங்களுடன் வயலில் உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதைப் பார்த்து உள்ளார். அதன் பின்னர் அவரை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அதிகபட்ச தீக்காயத்துடன் தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பிரச்சினையில் தலையிட்ட மாவட்ட நிர்வாகத்தினர் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டு கொடுத்துள்ளனர். இதன் காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இளம்பெண்ணை தீ வைத்து கொளுத்திய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 2 பேரை ஏற்கெனவே கைது செய்துவிட்டோம். தலைமறைவாகவே உள்ள மற்றொரு நபரைத் தேடி வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

பழங்குடியின பெண் தீ வைத்துக் கொள்ளப்பட்ட சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மத்தியப் பிரதேச பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, ‘‘குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜனதா சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்முவை முன்னிறுத்தப்பட்டுள்ள நிலையில், இத்தகைய கொடூரமான சம்பவம் நடந்துள்ளது வெட்கக்கேடானது’’ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்ட இனம் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை சந்திப்பது தொடர் கதையாகி வருவது துரதிருஷ்டவசமானது.

Leave your comments here...