சாலையில் வலிப்பு வந்தவருக்கு உதவி செய்த பாஜக தலைவர் அண்ணாமலை : குவியும் பாராட்டுகள் -வைரலாகும் புகைப்படம்!

சமூக நலன்தமிழகம்

சாலையில் வலிப்பு வந்தவருக்கு உதவி செய்த பாஜக தலைவர் அண்ணாமலை : குவியும் பாராட்டுகள் -வைரலாகும் புகைப்படம்!

சாலையில் வலிப்பு வந்தவருக்கு உதவி செய்த பாஜக தலைவர் அண்ணாமலை : குவியும் பாராட்டுகள் -வைரலாகும் புகைப்படம்!

குடியரசு தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவதற்காக பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று தமிழ்நாட்டிற்கு வந்தார்.

அப்போது அங்கிருந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு செல்லும் வழியில் ஒருவர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இறங்கி உதவி செய்ததாக அக்கட்சியின் துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை விமான நிலையம் வந்தடைந்த குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடக்கும் இடத்திற்கு நாங்கள் அனைவரும் கார்களில் செல்லும் வழியில் கிண்டியில் சாலையில் வலிப்பு வந்து ஒருவர் அவதிப்பட்டு கொண்டிருந்தார். எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரிலிருந்து இறங்கி அவருக்கு உதவிகளை செய்தனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், சக்கரவர்த்தி, கராத்தே தியாகராஜன், பால்கனகராஜ் ஆகியோருடன் நானும் இறங்கி சென்று அந்த நபர் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இருந்துவிட்டு பின்னர் கூட்டத்திற்கு சென்றோம் என்று பதிவிட்டுள்ளார்.

வலிப்பு நோயால் அவதிப்பட்டு கொண்டிருந்தவருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உதவி செய்யும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave your comments here...