தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்சநீதிமன்றம்..!

அரசியல்இந்தியா

தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்சநீதிமன்றம்..!

தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்சநீதிமன்றம்..!

பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் பேச்சுக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் வழக்கு தொடரப்பட்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எப்ஐஆர்கள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்ற வேண்டும் என நுபுர் சர்மா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் நுபர் சர்மாவை கடுமையாக சாடியுள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் கூறுகையில், நாடு முழுவதும் தீ பற்றி எரியும் சூழலை ஒன்றை நபராக நுபுர் சர்மா உருவாக்கியுள்ளார். நாட்டில் நிலவும் தற்போதைய சூழலுக்கு அவரே பொறுப்பு. உதய்பூரில் நடந்த சம்பவத்திற்கு நுபுர் சர்மாவின் சர்ச்சை பேச்சே காரணமாக அமைந்துவிட்டது. டிவியில் தோன்றி அவர் ஒட்டு மொத்த நாட்டின் முன் மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தால், தனக்கு அனைத்து அதிகாரமும் இருப்பதாகவும், நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்காமல் எதையும் பேச முடியும் என அவர் நினைக்கிறாரா. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி காவல்துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது. அவர் மீது போடப்பட்ட எப்ஐஆர்ரின் நிலை என்ன இவ்வாறு காட்டமான கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியது. நீதிமன்றத்தின் ஆவேசத்தை அடுத்து தனது மனுவை நுபுர் சர்மா தரப்பு திரும்பப்பெற்றது.

நுபுர் சர்மாவின் பேச்சுக்கு இந்தியா மட்டுமல்லாது, அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளிலும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த அழுத்தத்தை தொடர்ந்து அவர் பதவியை பறித்த பாஜக விளக்கம் கேட்டு கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்தது. தனது உயிருக்கே அச்சுறுத்தல் இருப்பதாக நுபுர் சர்மா தொடர்ந்து கூறிவருகிறார்.

Leave your comments here...