ஒராண்டு கடந்தும் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கவில்லை – திமுக ஆட்சி குறித்து ஜி.கே.வாசன் விமர்சனம்..!

அரசியல்தமிழகம்

ஒராண்டு கடந்தும் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கவில்லை – திமுக ஆட்சி குறித்து ஜி.கே.வாசன் விமர்சனம்..!

ஒராண்டு கடந்தும் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கவில்லை –  திமுக ஆட்சி குறித்து  ஜி.கே.வாசன் விமர்சனம்..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றமால், மக்களை திசை திருப்பி வருகிறது. ஒராண்டு கடந்தும் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கவில்லை என, மதுரையில் தமாக தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

மதுரையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்: “அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தமாக தலையீடாது, கூட்டணியில் இருப்பதால் நான் கருத்து கூற விரும்பவில்லை. அதிமுக தமிழகத்தில் மிக பலமான கட்சி, அதிமுக தமிழகத்தில் எதிர்கட்சிகளாக செயல்பட்டு வருகிறது.

பாஜக மக்களுக்காக போராடி வருகிறது. அதிமுகவுடன் பாஜக ஒத்த கருத்துடன் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியும் தங்களின் பலத்தை நிரூபிக்க பணிகள் செய்து வருகிறது. அதிமுவை பாஜக பிரித்து விட்டது என்ற கருத்து தமிழகத்தின் ஆளும் கட்சி, கூட்டணி கட்சிகளின் பயத்தை காட்டுகிறது. 2024 தேர்தலை முன்னிட்டு தமிழக கட்சிகளுக்கு இருக்கும் பயத்தை ஒட்டியே இப்படியான கருத்தை பரப்புகிறார்கள், தமிழகத்தில் எதிர்கட்சியாக அதிமுக தான் உள்ளது. இதை, பாஜக ஏற்றுக்கொள்ளும். அதிமுகவுடன் ஒத்த கருத்துடன் செயல்படுவது தான். பாஜக, அதிமுக பாஜகவுக்குள் எந்த போட்டியும் கிடையாது. திமுக ஒராண்டு ஆட்சியில் மக்கள் ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்து உள்ளனர்.

திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றமால், மக்களை திசை திருப்பி வருகிறது. ஒராண்டு கடந்தும் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கவில்லை, தமிழகத்தில் சட்டம் & ஒழுங்கை திமுக தலைமையிலான அரசு நிலை நாட்ட வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது, போதை ஒழிப்பை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும், பாலியல் வழக்குகளில் குற்றவாளி உறுதியான 24 மணி நேரத்தில் தூக்கு தண்டனை வழங்க வேண்டும். பாலியல் வழக்குகளுக்காக மாவட்டந்தோரும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்” என கூறினார்.

Leave your comments here...