ஆன்மிகம்
கொடியேற்றத்துடன் தொடங்கியது: திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா.!
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடந்தது. விழாவை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு, சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கொடியேற்றத்தை காண அதிகாலை 4 மணி முதல் கோவிலில் குவிய தொடங்கினர். விநாயகர், முருகர், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தின் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் , வருகிற 7ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற 10ந்தேதி ஏற்றப்படுகிறது. அன்று காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது.
Leave your comments here...