சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது தேவாரம், திருவாசகம் பாட பக்தர்களுக்கு அனுமதி..!!

தமிழகம்

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது தேவாரம், திருவாசகம் பாட பக்தர்களுக்கு அனுமதி..!!

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது தேவாரம், திருவாசகம் பாட பக்தர்களுக்கு அனுமதி..!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்கு கோவில் பொது தீட்சிதர்கள் கடந்த 2 ஆண்டுகளாக மறுப்பு தெரிவித்த வந்த நிலையில், இதுதொடர்பாக இந்து அறநிலையத்துறை அலுவலகத்திற்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்யவும், சபையில் தேவாரம், திருவாசகம் பாடலாம் என அரசாணை பிறப்பித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள், குடியரசு தலைவர், பிரதமர், இந்து அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பினர். இந்நிலையில், நேற்று இந்து அறநிலையத்துறை ஆணையர், கோயில் தீட்சிதர்களின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.

அக்கடிதத்தில் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி நின்று பக்தர்கள் தேவாரம், திருவாசகம் மற்றும் திருமுறைகளை ஓதி வழிபட தீட்சிதர்கள் அனுமதி மறுப்பதாக புகார் வந்தது. அதனடிப்படையில், தமிழக அரசு ஏற்கெனவே பிறப்பித்த அரசாணைப்படி, ஒவ்வொரு கால பூஜை முடிந்த பின்பும், முதல் 30 நிமிட நேரத்திற்கு தேவாரம், திருவாசகம் ஓதி வழிபடவும், திருக்கோயில் நிர்வாகத்தை அணுகவும் பக்தர்களை அரசாணைப்படி அனுமதிக்க வேண்டும் எனவும் கோயில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.

அதாவது, தேவாரம், திருவாசகத்தை ஓதி வழிபட வரும் பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க கடலூர் ஏடிஎஸ்பி அசோக் குமார், 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 60க்கும் மேற்பட்ட போலீசார் கோயில் வெளிப்பிரகாரம் மற்றும் உட்பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பது பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Leave your comments here...