தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 27ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.!

தமிழகம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 27ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 27ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 27ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துதல், புதிய திட்டங்களுக்கான அனுமதி, புதிய கொள்கைகள் குறித்து முடிவெடுக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பருவ மழை முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ளவும், நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து விரைவுபடுத்தவும் அறிவுறுத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது. கூட்டத்தில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் தெரிவிக்கும் முதல்வர் ஸ்டாலின், நிர்வாக ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது குறித்தும் தெரிவிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave your comments here...