அடிப்படை வசதி கேட்டு முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியாளர் மனு..!

உள்ளூர் செய்திகள்தமிழகம்

அடிப்படை வசதி கேட்டு முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியாளர் மனு..!

அடிப்படை வசதி கேட்டு முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள்  மாவட்ட ஆட்சியாளர் மனு..!

மதுரை மாவட்டம், திண்டியூர் ஊராட்சி ஒன்றியத்தில், உள்ள பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் அந்த பகுதி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது வசித்து வருகிறார்கள். இந்தநிலையில், அந்த பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகள் சாலை தெருவிளக்கு குடிநீர் தரப்படவில்லை.

அதேபோல், மழைக்காலங்களில் சாலை முழுவதும் மற்றும் குடியிருப்பு பகுதியில் மழை நீர் புகுந்ததால் வீடு விட்டு வெளியேற முடியாமல் இருக்கிறோம். இதனால், நோய் தொற்று ஏற்படுவதற்கு அதிகமாக வாய்ப்புகள் உள்ளது.

இது குறித்து, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு பல் முறை புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.

– மதுரை ரவிசந்திரன்

Leave your comments here...