அரசு கூடுதல் செயலாளரை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்..!

தமிழகம்

அரசு கூடுதல் செயலாளரை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்..!

அரசு கூடுதல் செயலாளரை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்..!

விருதுநகரில் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த கால்நடை பராமரிப்புத்துறை அரசு கூடுதல் செயலாளர், அங்கிருந்த வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளரை ஒருமையில் பேசி தள்ளிவிட்டதாக கூறி வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் செயலாளர் ஜவஹர், சொந்தப்பணி காரணமாக தென்காசியில் இருந்து விருதுநகர் வழியாக மதுரைக்கு சென்றார். மதுரைக்கு செல்லும் வழியில் விருதுநகர் அரசு மாளிகைக்கு வந்த கூடுதல் செயலாளர் ஜவஹர், வட்டாட்சியர் செந்தில்வேல் மற்றும் வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோரை ஒருமையில் பேசியதாகவும், அவர்களை தள்ளி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையறிந்த வருவாய்த்துறை அலுவலர்கள் விருந்தினர் மாளிகை முன்பு திரண்டனர். வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் பொன்ராஜ் தலைமையில், அரசு கூடுதல் செயலாளர் ஜவஹரை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave your comments here...