சிவகாசி அருகே மின்னல் தாக்கியதில், பட்டாசு ஆலை குடோன் இடிந்து தரைமட்டம்..!

உள்ளூர் செய்திகள்தமிழகம்

சிவகாசி அருகே மின்னல் தாக்கியதில், பட்டாசு ஆலை குடோன் இடிந்து தரைமட்டம்..!

சிவகாசி அருகே மின்னல் தாக்கியதில், பட்டாசு ஆலை குடோன் இடிந்து தரைமட்டம்..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில், நேற்று மாலை முதல் இரவு வரை விட்டு விட்டு பரவலாக நல்ல மழை பெய்தது. சிவகாசி – சாத்தூர் சாலையில் உள்ள பேராபட்டி பகுதியிலும் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது.

இந்தப் பகுதியில் நாகூர்கனி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டதால், ஆலை உரிமத்தின் பெயர் மாற்றுவதற்காக பட்டாசு ஆலை செயல்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த பட்டாசு ஆலையின் பட்டாசுகள் இருப்பு வைக்கும் குடோனை மின்னல் தாக்கியது. இதனால் அந்த குடோன் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

இதில் குடோனில் இருப்பு வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. விபத்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பட்டாசு ஆலை இயங்காத நிலையில், அங்கு தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

– மதுரை ரவிசந்திரன்

Leave your comments here...