வேளிமலை முருகன் கோவில் தேரோட்டம் – இறை நம்பிக்கை இல்லாத அமைச்சர் தேரை இழுக்க எதிர்ப்பு தெரிவித்த பாஜக இந்து அமைப்பினர் கைது..!

அரசியல்தமிழகம்

வேளிமலை முருகன் கோவில் தேரோட்டம் – இறை நம்பிக்கை இல்லாத அமைச்சர் தேரை இழுக்க எதிர்ப்பு தெரிவித்த பாஜக இந்து அமைப்பினர் கைது..!

வேளிமலை முருகன் கோவில்  தேரோட்டம் – இறை நம்பிக்கை இல்லாத அமைச்சர் தேரை இழுக்க எதிர்ப்பு தெரிவித்த பாஜக இந்து அமைப்பினர் கைது..!

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாரகோவிலில் வேளிமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகத் திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் முருகன், வள்ளி மற்றும் விநாயகர் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன. 9-ம் நாள் நடைபெறும் தேர் திருவிழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுப்பார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் அமைச்சர் மனோ தங்கராஜ் வடம் பிடிக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவர் வடம் பிடித்தால் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது.இதனால் குமாரகோவில் பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. தேர் திருவிழா நாளில் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்படலாம் என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு தேர் திருவிழா நாளான இன்று (சனிக்கிழமை) குமார கோவில் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், தக்கலை துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் இன்று காலையில் சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் முருகன்-வள்ளி ஒரு தேருக்கும் விநாயகர் ஒரு தேருக்கும் எழுந்தருளினர். காலை 8-30 மணிக்கு அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் வந்தனர்.அவர்கள் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

அப்போது பாஜக, இந்து அமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அமைச்சர் மனோ தங்கராஜூக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் ,நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி ,ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் குமரி சங்க சாலக் ராஜேந்திரன், தமிழக பாஜக இளைஞரணி துணைத் தலைவர் சிவபாலன், குமரி மாவட்ட பாஜக துணைத் தலைவர் ப. ரமேஷ், இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மிசா .சோமன், N.K.பாபு அவர்கள் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில பொறுப்பாளர் காளியப்பன் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கைது செய்யப்பட்டு குமாரகோவில் பாலு மஹாலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து இந்து அமைப்புகள் கூறுகையில்:- குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் காலங்காலமாக நடந்துகொண்டிருக்க கூடிய தேர்பவனி ஆனது ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டு அறநிலையத்துறை சட்டத்திட்டங்களை மதிக்காமல் அறநிலையத் துறையும் காவல் துறையும் சேர்ந்து மாற்று மதத்தினரை வைத்து தேர் பவனியை இழுக்க முயற்சி செய்தனர்.

அதை இப்பகுதியின் பக்த பெருமக்கள் பொதுமக்களும் எதிர்ப்பை தெரிவித்தனர் அதையும் பொருட்படுத்தாமல் இந்த பக்தர்கள் எல்லாம் கைது செய்து ஒரு தேரை காவல்துறையும், காவல் துறையினர் சீருடை இல்லாதவர்களும் ஒரு தேர் இழுத்தார்கள்.

மற்றொரு தேரை இஸ்லாமிய கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்தவர்கள் இழுத்தார்கள், இழுத்து இங்குள்ள பக்தர்களின் மனநிலையை புண்படுத்தினார்கள். ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தின் மனநிலையையும் புண்படுத்தினார்கள்.இதனை எதிர்த்து கேள்வி கேட்ட இந்து உணர்வாளர்களையும் பக்தர்கள் அனைவரையும் கைது செய்திருக்கிறது ஆளும் அரசின் காவல்துறை என கூறுகிறார்கள்

செய்தி : H.Tharnesh

Leave your comments here...