தப்பித் தவறிகூட ஆதீனத்தை தொட்டு விடாதீர்கள் : விளைவுகள் பயங்கரமாக இருக்கும் – அண்ணாமலை எச்சரிக்கை

அரசியல்

தப்பித் தவறிகூட ஆதீனத்தை தொட்டு விடாதீர்கள் : விளைவுகள் பயங்கரமாக இருக்கும் – அண்ணாமலை எச்சரிக்கை

தப்பித் தவறிகூட ஆதீனத்தை தொட்டு விடாதீர்கள் : விளைவுகள் பயங்கரமாக இருக்கும் – அண்ணாமலை எச்சரிக்கை

திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே, மத்திய பாஜக அரசின், 8 ஆண்டுக்கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை வகித்தார். இதில், திருச்சி மாநகர் புறநகர், மற்றும் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பாஜகவினர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், “திருச்சி மாவட்டத்தில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு, அவர் எந்தத் துறை அமைச்சர் என்று அவருக்கே தெரியவில்லை. அவரது நண்பர் உதயநிதி ஸ்டாலின் சூட்டிங் நிகழ்ச்சி நடக்கும்போது லைட்டு பாயாக அமைச்சர் சென்று அமர்ந்திருப்பார்.

பின்னர் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குவார். மாணவர்கள் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்த்து கற்றுக் கொள்வார்கள். ஆனால், எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள்.

தற்போது புது காஸ்டியூம் போட்டுள்ளார் அமைச்சர் சேகர் பாபு. மீண்டும் காவி வேட்டி கட்டத் துவங்கியுள்ளார். மதுரை ஆதீனத்தை அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து மிரட்டி வருகிறார். பழைய சேகர்பாபுவாக மாறுவதை பார்ப்பதற்குத்தான் மோடி அரசு காத்துக் கொண்டு இருக்கிறது. ஆதீனத்தின் மேல் மட்டும் நீங்கள் கையை வைத்து பாருங்கள். ஆதீனத்தை மிரட்டும் வேலையை நிறுத்தி விடுங்கள். மதுரையில் துறவிகள் மாநாடு நடந்து முடிந்து இருக்கிறது. ஆதீனங்களை நேரில் வர சொல்லி முதல்வரை சந்திக்க வைக்கின்றனர். ஆதீனத்தை மிரட்ட ஆரம்பித்து விட்டனர். இதுதான் இவர்களுடைய அழிவுக்கு காரணமாக இருக்கும்.

வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டதாக கூறுகின்றனர். கடந்த, 2007ல் இந்த இடத்தை குத்தகைக்கு விட்டவர்களே நீங்கள்தான். தப்பித் தவறிகூட ஆதீனத்தை தொட்டு விடாதீர்கள். அதன் விளைவுகள் மிக பயங்கரமாக இருக்கும்.

Leave your comments here...