12 ஆண்டுகளுக்கு பின் மதுரை – தேனி இடையே இன்று முதல் ரயில் சேவை: பிரதமர் மோடி காணொளியில் துவக்கி வைக்கிறார்

தமிழகம்

12 ஆண்டுகளுக்கு பின் மதுரை – தேனி இடையே இன்று முதல் ரயில் சேவை: பிரதமர் மோடி காணொளியில் துவக்கி வைக்கிறார்

12 ஆண்டுகளுக்கு பின் மதுரை – தேனி இடையே இன்று முதல் ரயில் சேவை: பிரதமர் மோடி காணொளியில் துவக்கி வைக்கிறார்

மதுரை – தேனி புதிய அகல ரயில் பாதை திட்டத்தை, பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார். மதுரை – தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே இருந்த மீட்டர்கேஜ் பாதை, அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த 75 கி.மீ. தூர அகல ரயில்பாதையில் மூன்று சாலை மேம்பாலங்கள், ஐந்து பெரிய பாலங்கள், 161 சிறிய பாலங்கள், 32 சுரங்கப்பாதைகள், 17 ரயில்வே கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரை – போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்திற்காக கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி வரை ரூ.445.46 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் பாதையை, பிரதமர் மோடி இன்று (மே 26) மாலை 5.45 மணிக்கு சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைக்கிறார்.

மதுரை – உசிலம்பட்டி வரையிலான 37 கி.மீ. அகல ரயில்பாதை 2020ம் ஆண்டு ஜனவரி மாதமும், உசிலம்பட்டி – ஆண்டிபட்டி இடையேயான 21 கி.மீ. புதிய அகல ரயில் பாதை 2020ம் ஆண்டு டிசம்பர் மாதமும், ஆண்டிபட்டி – தேனி இடையேயான 17 கி.மீ. அகல ரயில் பாதை இந்த ஆண்டு மார்ச் மாதமும் ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் ஆய்வு செய்யப்பட்டது.

இறுதியாக மதுரை – தேனி பிரிவில் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்கலாம் எனவும் பாதுகாப்பு ஆணையர் சான்றிதழ் அளித்துள்ளார். இன்று மாலை, பயணிகள் மற்றும் அதிகாரிகளுடன் புதிய ரயில் சேவை வெள்ேளாட்டமாக இயக்கப்படுகிறது. நாளை (மே 27) முதல் வழக்கமான ரயில் சேவை துவக்கப்பட இருக்கிறது.

மதுரை – தேனி இடையே ரயில் கட்டண விபரம் வருமாறு:
மதுரை – வடபழஞ்சி- ரூ.30
மதுரை – உசிலம்பட்டி- ரூ.30
மதுரை – ஆண்டிபட்டி- ரூ.35
மதுரை – தேனி- ரூ.45
மதுரை – தேனி நகரங்களுக்கு இடையே பேருந்து பயண நேரம் மற்றும் கட்டணம் ஆகியவற்றை விட ரயில் பயண நேரம் மற்றும் கட்டணம் குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...