ஞானவாபி மசூதி வழக்கு விசாரணை நிறைவு – தீர்ப்பு ஒத்திவைப்பு..!

இந்தியா

ஞானவாபி மசூதி வழக்கு விசாரணை நிறைவு – தீர்ப்பு ஒத்திவைப்பு..!

ஞானவாபி மசூதி வழக்கு விசாரணை நிறைவு – தீர்ப்பு ஒத்திவைப்பு..!

ஞானவாபி மசூதி வழக்கு விசாரணையை, வாராணசி மாவட்ட கோர்ட்டு இன்று நிறைவு செய்த நிலையில், நாளை வரை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்படும் ஆய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மசூதி தரப்பு தொடர்ந்த மனுவை, கடந்த வாரம் விசாரித்த நீதிபதி டிஒய் சந்திரசூட், ஞானவாபி மசூதி வழக்கை உத்தரபிரதேசத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த நீதிபதி ஒருவர் விசாரிப்பார் என்று தெரிவித்தார்.

இது ஒரு சிக்கலான, முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், இந்த வழக்கை வாரணாசியில் உள்ள அனுபவம் வாய்ந்த மூத்த நீதிபதிக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு இந்த வார தொடக்கத்தில் உத்தரவிட்டது. மேலும், சமூகங்களுக்கிடையில் சகோதரத்துவத்தின் தேவை மற்றும் அமைதியின் தேவை மிக முக்கியமானதாக கோர்ட்டு பார்க்கிறது என தெரிவிக்கப்பட்டது. மசூதி வளாகத்தில் நடந்த ஆய்வு சம்பந்தப்பட்ட எந்தவொரு தகவலையும் வெளியில் கசியவிடக் கூடாது என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இன்று மதியம் இந்த வழக்கு, வாராணசி மாவட்ட கோர்ட்டில் மூத்த நீதிபதி ஏ கே விஷ்வேஷா முன்பு விசாரணைக்கு வந்தது. ஞானவாபி மசூதி வழக்கு விசாரணையை இன்று நிறைவு செய்த நிலையில், நாளை வரை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை தொடர்ந்து, தீர்ப்பு வெளியாகும் அல்லது ஒத்தி வைக்கப்படும் எனத் தெரிகிறது.

Leave your comments here...