இந்தியா- வங்காளதேசம் இடையிலான 3-வது ரயில் சேவை : ஜூன் 1 முதல் தொடக்கம்..!

இந்தியா

இந்தியா- வங்காளதேசம் இடையிலான 3-வது ரயில் சேவை : ஜூன் 1 முதல் தொடக்கம்..!

இந்தியா- வங்காளதேசம் இடையிலான 3-வது ரயில் சேவை : ஜூன் 1 முதல் தொடக்கம்..!

இந்தோ-வங்காளதேச ரயில் சேவை, “மிதாலி எக்ஸ்பிரஸ்”, இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் நியூ ஜல்பைகுரி நிலையத்தில் இருந்து வங்காளதேசத்தில் உள்ள டாக்காவிற்கு ஜூன் 1 முதல் தனது பயணத்தைத் தொடங்க உள்ளது.

இது மூன்றாவது இந்திய-வங்காளதேச ரயில் சேவையாகும். இந்த ரயில் நியூ ஜல்பைகுரி மற்றும் டாக்கா (டாக்கா கண்டோன்மென்ட் நிலையம்) இடையே 513 கிலோமீட்டர் தூரத்தை ஒன்பது மணி நேரத்தில் கடக்கும்.

தற்போதைய நிலவரப்படி, இது நான்கு குளிரூட்டப்பட்ட கேபின் கோச்சுகள் மற்றும் நான்கு குளிரூட்டப்பட்ட நாற்காலி இருக்கையுடன். டீசல் இன்ஜின் மூலம் ரயில்சேவை நடைபெற உள்ளது.

Leave your comments here...