குஜராத் தேர்தல் நெருங்கும் வேளையில் திருப்பம் – காங்கிரசில் இருந்து ஹர்திக் படேல் ராஜினாமா..!

அரசியல்

குஜராத் தேர்தல் நெருங்கும் வேளையில் திருப்பம் – காங்கிரசில் இருந்து ஹர்திக் படேல் ராஜினாமா..!

குஜராத் தேர்தல் நெருங்கும் வேளையில் திருப்பம் – காங்கிரசில் இருந்து ஹர்திக் படேல் ராஜினாமா..!

குஜராத் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்., கட்சியில் செயல் தலைவராக இருந்த ஹர்திக் படேல் அக்கட்சியில் இருந்து விலகினார். இது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இம்மாநிலத்தில் படேல் சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கின்றனர். இவர்களின் ஓட்டுகளை பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும் என கருதப்படுகிறது. இந்த சமூகத்தை சேர்ந்த ஹர்திக் படேல் சில ஆண்டுகளுக்கு முன் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இதையடுத்து காங். தலைவர்கள் ஹர்திக் படேலை 2019ல் கட்சியில் இணைத்தனர். அவருக்கு குஜராத் மாநில காங். கட்சியின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது. சில நாட்களாக காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தியில் இருந்து வந்த ஹர்திக் படேல், சில நாட்களுக்கு முன்னர், சமூக வலைதளங்களில் இருந்து குஜராத் காங். செயல் தலைவர் என்ற தன் சுய விபரத்தை நீக்கினார். இதனால், அவர் காங்கிரசில் இருந்து வெளியேறலாம் என தகவல் வெளியாகின.

இந்நிலையில், இன்று( மே 18) காங்கிரசில் இருந்து ஹர்திக் படேல் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து விலகி உள்ளேன். இதனை சக நிர்வாகிகள் மற்றும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். எதிர்காலத்தில் மாநிலத்தின் நலனுக்காக உழைக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஹர்திக் படேல், காங்கிரசில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பின்னடைவாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave your comments here...