2ஜி சகாப்தம் ஊழலின் அடையாளம் : நாடு 3ஜி, 4ஜி என வளர்ந்து, தற்போது 5ஜி, 6ஜி என முன்னேறியிருக்கிறது – காங்கிரஸ் மீது பிரதமர் மோடி மறைமுக சாடல்..!

இந்தியா

2ஜி சகாப்தம் ஊழலின் அடையாளம் : நாடு 3ஜி, 4ஜி என வளர்ந்து, தற்போது 5ஜி, 6ஜி என முன்னேறியிருக்கிறது – காங்கிரஸ் மீது பிரதமர் மோடி மறைமுக சாடல்..!

2ஜி சகாப்தம் ஊழலின் அடையாளம் :  நாடு 3ஜி, 4ஜி என வளர்ந்து, தற்போது 5ஜி, 6ஜி என முன்னேறியிருக்கிறது – காங்கிரஸ் மீது பிரதமர் மோடி மறைமுக சாடல்..!

தொலைத்தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையமான ‘ட்ராய்’ அமைப்பின் வெள்ளிவிழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி இதில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியையொட்டி அஞ்சல்தலை ஒன்றையும் அவர் வெளியிட்டார். மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தேவுசிங் சவுகான், முருகன், தொலைத் தொடர்பு மற்றும் ஒலிபரப்புத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 5ஜி சோதனைக் கருவி, தொலைத்தொடர்புத் துறையில் நவீன தொழில்நுட்பம் மற்றும் தற்சார்பில் முக்கியத்துவத்தை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கை என்று கூறினார். ஐஐடி-க்கள் உட்பட இந்தத் திட்டத்தில் தொடர்புடைய அனைவரையும் அவர் பாராட்டினார். “நாட்டின் சொந்த 5ஜி தரம், 5ஜிஐ என்ற வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது, இது நாட்டுக்கு பெரும் மதிப்பு அளிக்கும் விஷயமாகும். நாட்டின் கிராமங்களுக்கு 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றும்” என்று அவர் கூறினார்.

21-ம் நூற்றாண்டின் இந்தியாவில் வளர்ச்சியின் வேகத்தை தொலைத்தொடர்பு தீர்மானிக்கும் என்று கூறிய பிரதமர், இதற்கு ஒவ்வொரு மட்டத்திலும் தொடர்பு நவீனமயமாக்கப்பட வேண்டும் என்றார். நாட்டின் ஆளுகை, எளிதாக வாழுதல், எளிதாக வர்த்தகம் புரிதல், ஆகியவற்றில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை 5ஜி தொழில்நுட்பம் கொண்டுவரப்போகிறது என்று அவர் கூறினார். இது வேளாண்மை, சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, போக்குவரத்து போன்ற ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இது ஏராளமான வேலை வாய்ப்புகளையும், வசதிகளையும் அதிகரிக்கும். 5ஜி-யை வேகமாக பிரபலப்படுத்த அரசு மற்றும் தொழில்துறையின் முயற்சிகள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

தற்சார்பு மற்றும் ஆரோக்கியமான போட்டி ஆகியவை சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் எத்தகைய பன்னோக்குப் பயனை உருவாக்கும் என்பதற்கு தொலைதொடர்புத்துறை பெரும் உதாரணமாகும் என்று பிரதமர் கூறினார். 2-ஜி யுகத்தின் விரக்தி, ஏமாற்றம், ஊழல், கொள்கை முடக்கம் ஆகியவற்றிலிருந்து வெளிவந்து நாடு, 3ஜி, 4ஜி, தற்போது 5ஜி மற்றும் 6ஜி-யை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 8 ஆண்டுகளில், அடைதல், சீர்திருத்தம், ஒழுங்குப்படுத்துதல், விடையளித்தல், புரட்சிகரப்படுத்துதல் ஆகிய பஞ்சாமிர்தத்துடன் தொலைத் தொடர்புத்துறையின் புதிய ஆற்றல் ஊக்குவிப்பட்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். இதில் முக்கிய பங்காற்றியதற்காக ட்ராய்-யை அவர் பாராட்டினார். சென்றவற்றை நினைப்பதை கைவிட்டு, நாடு தற்போது அரசின் அணுகுமுறையுடன் முன்னேறி செல்வதாக அவர் கூறினார். இன்று தொலைத்தொடர்பு மற்றும் இணையதள பயன்பாடு விஷயத்தில் உலகிலேயே மிக வேகமாக முன்னேறும் வகையில் நாட்டில் இதனை விரிவுப்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். இதில், தொலைத்தொடர்புத்துறை உட்பட பல துறைகள் முக்கிய பங்காற்றியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

இன்று பரம ஏழைக் குடும்பங்களிலும் செல்பேசி சென்றடைந்துள்ளதை உறுதி செய்துள்ளோம் என்று கூறிய பிரதமர், இதற்கு செல்பேசி தயாரிப்பு நிறுவனங்கள் அதிகரித்ததே காரணம் என்று குறிப்பிட்டார். முன்பு இரண்டு செல்பேசி தயாரிப்பு நிறுவனங்கள் இருந்த நிலையில் தற்போது இது 200-ஆக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்தையும் கண்ணாடி இழை இணைத்துள்ளது என பிரதமர் குறிப்பிட்டார். 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு 100 கிராம ஊராட்சிகளில் கூட இந்த வசதி இருக்கவில்லை என்றார். தற்போது 1.75 லட்சம் கிராம ஊராட்சிகளில் அகண்ட அலைவரிசை இணைப்பை நாம் செய்திருக்கிறோம். இதன் பயனாக நூற்றுக்கணக்கான அரசு சேவைகள் கிராமங்களைச் சென்றடைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

நிகழ்காலம் மற்றும் எதிர்கால சவால்களை சமாளிக்க, அரசின் முழு அணுகுமுறையும் ட்ராய் போன்ற ஒழுங்குமுறை நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியமாகும் என்று பிரதமர் தெரிவித்தார். “இன்று ஒழுங்கு முறை என்பது ஒரு துறை எல்லைகளுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. பல்வேறு துறைகளை தொழில்நுட்பம் இணைத்துள்ளது. அதனால் தான் இன்று ஒவ்வொருவரும் ஒருங்கிணைந்த ஒழுங்குமுறையின் அவசியத்தை உணர்ந்துள்ளனர். இதற்கு அனைத்து ஒழுங்குமுறை நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து பொதுவான தளங்களை உருவாக்கி சிறந்த ஒருங்கிணைப்புக்கான தீர்வுகளை கண்டறிவது அவசியமாகும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Leave your comments here...