நடிகர் பிரகாஷ் ராஜ் ராஜ்யசபா எம்.பி ஆக இருப்பதாக தகவல்..!

அரசியல்

நடிகர் பிரகாஷ் ராஜ் ராஜ்யசபா எம்.பி ஆக இருப்பதாக தகவல்..!

நடிகர் பிரகாஷ் ராஜ் ராஜ்யசபா எம்.பி ஆக இருப்பதாக தகவல்..!

பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், 57, தெலுங்கானாவில் இருந்து ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.

இங்கு, ஏழு ராஜ்யசபா எம்.பி., பதவிகளும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்யும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி வசமே உள்ளன.இந்நிலையில், ராஜ்ய சபாவில் எம்.பி.,க்களாக இருக்கும் வோடிடெலா லட்சுமிகாந்த ராவ் மற்றும் தருமபுரி நிவாஸ் ஆகியோரின் பதவிக்காலம் ஜூன் 21ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. காலியாகும் இந்த இரண்டு எம்.பி., பதவிக்கான தேர்தல் ஜூன் 10ல் நடக்கிறது.

இதற்கிடையே, பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், சமீபத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், முதல்வருமான சந்திரசேகர ராவை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, பிரகாஷ் ராஜுக்கு ராஜ்யசபா ‘சீட்’ வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகிஉள்ளது.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். திரைப் படங்களை தயாரித்தும் வருகிறார்.

Leave your comments here...