தமிழ் மக்களுக்கு சமநிலை, நடவடிக்கைகளை கோத்தபய மேற்கொள்வார் என நம்புகிறேன்: பிரதமர் மோடி

அரசியல்

தமிழ் மக்களுக்கு சமநிலை, நடவடிக்கைகளை கோத்தபய மேற்கொள்வார் என நம்புகிறேன்: பிரதமர் மோடி

தமிழ் மக்களுக்கு சமநிலை, நடவடிக்கைகளை கோத்தபய மேற்கொள்வார் என நம்புகிறேன்: பிரதமர் மோடி

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். பின்னர் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. கோத்தபய ராஜபக்சேவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றுள்ளனர். முன்னதாக பயணத்தின் முக்கிய அம்சமாக டெல்லியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் அவர்களை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி:- வலிமையான இலங்கை அமைய வேண்டும் என்பதற்காக மக்கள் கோத்தபயவை தேர்வு செய்தனர். வலிமையான இலங்கை என்பது இந்தியாவின் நலன்களுக்கு மட்டும் அல்லாமல், இந்திய கடல் பகுதிக்கும் முக்கியம். இந்தியா இலங்கை இடையே வலிமையான உறவு உள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில், இலங்கைக்கு நாம் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் கண்டனம் தெரிவிப்பதுடன், போரிட்டும் வருகிறது. இலங்கைக்கு, பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக 50 மில்லியன் டாலரும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக 400 மில்லியன் டாலரும், சோலார் திட்டங்களுக்காக 100 மில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியா செய்யும். இலங்கையில், இந்தியா சார்பில் 46 ஆயிரம் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. அங்கு வாழும் தமிழ் மக்களுக்காக கூடுதலாக 14 ஆயிரம் வீடுகள் கட்டி தரப்படும். இலங்கை மறுசீரமைப்பு குறித்து, இலங்கை அதிபர் தனது கருத்தை என்னிடம் தெரிவித்தார். இலங்கையை மறுசீரமைப்பது என்ற அடிப்படையில், முந்தைய அரசு மேற்கொண்ட, தமிழ் மக்களுக்கு மரியாதை, சமநிலை, சமூக நீதி, அமைதி போன்ற நடவடிக்கைகளை கோத்தபயா மேற்கொள்வார் என நம்புகிறேன். 13வது சட்ட திருத்தத்தை அமல்படுத்துவதன் மூலமும் இலங்கையில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்றார்.

பின்னர் பேசிய கோத்தபய ராஜபக்சே:- இருநாட்டு உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். மேலும் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறினார்.

இதற்கிடையே கடந்த 2017ம் ஆண்டில் அதிபர் சிறிசேனா அரசு செயல்பட்டது. சீனாவின் தனியார் நிறுவனத்திற்கு இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கிய ஒப்பந்தத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கையெழுத்திட்டார். தற்போது கோத்தபய அதிபரானதும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார். இதற்கு முன்னாள் மஹிந்த ராஜபக்சே அரசின் கோத்தபய ராணுவ அமைச்சராக இருந்தார். அப்போது சீனாவுக்கு ஆதரவாக பல்வேறு திட்ட பணிகள் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave your comments here...