சென்னை விமான நிலையத்தில் ரூ. 31.99 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!

தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 31.99 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 31.99 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!

துபாயிலிருந்து, துபாய் ஏர்லைன்ஸ் விமானம் மூலம், 8.5.2022 அன்று சென்னை வந்த ஒரு பயணியை, விமான நிலைய சுங்கத்துறையினர், அண்ணா சர்வதேச விமான நிலைய சர்வதேச முனையத்தின் வெளியேறும் பகுதியில் வழிமறித்து சோதனையிட்டனர்.

இந்த சோதனையின் போது, அந்த பயணி அவரது மலக்குடலில் மறைத்து கடத்தி வந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 24 காரட் தூய்மையான இந்த 686 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ. 31.99 லட்சமாகும். இதையடுத்து அந்த பயணி கைது செய்யப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave your comments here...