பேருந்தில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் – டிக்கெட் எடுத்தாரா..? – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி..!

அரசியல்

பேருந்தில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் – டிக்கெட் எடுத்தாரா..? – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி..!

பேருந்தில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் – டிக்கெட் எடுத்தாரா..? – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி..!

பேருந்தில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் டிக்கெட் எடுத்தாரா என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக ஆட்சி ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, நேற்று திடீரென 29C சென்னை மாநகர பேருந்தில் ஏறி பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணிகளிடம் ஆட்சி எப்படி இருக்கிறது என்று பேசிக்கொண்டே பயணம் செய்தார். பெண்களிடம் இலவச பேருந்து பயணம் குறித்த விபரங்களை கேட்டறிந்தார். முதல்வர் திடீரென பேருந்தில் பயணம் செய்தது அங்கிருந்த பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முதல்வரைப் பார்த்ததும் அவர்கள் உடனடியாக எழுந்து நின்றனர். இதைப் பார்த்த முதல்வர், பயணிகளை உட்காரும்படி கூறி விட்டு பேருந்தில் பயணத்தை தொடர்ந்தார். பேருந்துக்கு முன்னாலும் பின்னாலும் பாதுகாப்பு வாகனங்கள் அணி வகுத்தன. பேருந்தில் கூட்டம் இருந்ததால் முதல்வர் நின்றுகொண்டே பயணம் செய்தார்.

பின்னர் நிறுத்தத்தில் இறங்கி கார் மூலம் அண்ணா, கலைஞர் சமாதிக்கு முதல்வர் சென்றார். தமிழக முதல்வரின் இந்த திடீர் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல்லில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், ‘லஞ்ச லாவண்யம் என்பதே பெருத்து விட்டது. லஞ்ச லாவண்யம் இல்லாமல் எந்த ஒரு அரசு பணியும் செய்யாத நிலையில் தள்ளப்பட்டு விட்டார்கள். சினிமாவில் எப்படி ஹீரோ இருப்பார்களோ அதேபோல் ஸ்டாலின் அவர்களுக்கு மேக்கப் போட்டு ஒரு வருடகாலம் போட்டு விட்டார்கள்.நல்ல ஒரு இளைஞராக காட்டி டீக்கடைக்கு சென்று அவர்கள் கொண்டு செல்லும் கிளாஸ்லையே அழையா விருந்தாளியாக இவரே சென்று சாப்பிட்டு சட்டப்பேரவைக்கு பேருந்தில் சென்றார். பேருந்தில் சென்றாரே டிக்கெட் எடுத்தாரா? என சந்தேகமாக உள்ளது’’ என்று தெரிவித்தார்.

Leave your comments here...