சபரிமலையில் வைகாசி மாத பூஜை – தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.!

ஆன்மிகம்

சபரிமலையில் வைகாசி மாத பூஜை – தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.!

சபரிமலையில் வைகாசி மாத பூஜை – தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.!

சபரிமலையில் வைகாசி மாத பூஜைகளை முன்னிட்டு தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 14ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

இந்த நாட்களில் தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை, புஷ்பாபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகளும், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை உட்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 15ம் தேதி காலை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில் வைகாசி மாத பூஜைகளுக்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்றும், நிலக்கல்லில் உடனடி முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

Leave your comments here...